சினிமா

ஆஸ்கார் விருது பெற்ற சிறுவன் சேரியில் தவிக்கும் அவலம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

15 கோடியில் உருவான “ஸ்லம்டாக் மில்லியனர்” திரைப்படம் 2008ஆம் ஆண்டு வெளியாகி இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகரிகளை மிகவும் கவர்ந்தது. அந்த படம் பல விருதுகளை வாங்கி குவித்தது.

ஆஸ்கர் மற்றும் குழந்தைகளுடன் டேனி போயல்

ஸ்லம்டாக் மில்லினர் படம் புதுமுக நடிகர், நடிகைகள் கொண்டு உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் வெளியாகி 377 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது.

இந்நிலையில் இந்த படத்தில் அசாருதின் முகமது என்ற சிறுவன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

Related image

இவருடைய நடிப்பு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு பாராட்டப்பட்டது. இந்த படத்திற்காக அசாருதின் முகமது பல விருதுகளைப் பெற்று உள்ளார்.

Related image

அசாருதின் முகமது படத்தில் நடிப்பதற்கு முன்னால் சொந்த வீடு கிடையாது. சேரியில் ஒரு தகரக் கொட்டகையில் இவர் வாழ்ந்து வந்தார். இவரை பற்றி தெரிந்த இயக்குனர், படம் வெளியான கையோடு இவருக்கு 45 லட்சம் மதிப்பில் ஒரு வீடு ஒன்று வாங்கி தந்தார்.

ALSO READ  மீண்டும் ஒரு உலக புகழ் பெற்ற விருதுக்கு 'சூரரை போற்று' தேர்வு !

ஆனால், அசாருதின் முகமதுக்கு ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு பிறகு பெரிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. கிடைத்த வேலையை செய்து வந்து உள்ளார். ஒரு கட்டத்தில் கஷ்டங்கள் தாங்க முடியாமல் குடி மற்றும் போதைக்கு அடிமையானர்.

குடும்பத்தின் கடன் சுமை அதிகரித்து 45 லட்சம் மதிப்புள்ள வீட்டை விற்று கடனை அடைத்தார். தற்போது மீண்டும் சேரிக்கே சென்று வசித்து வருகிறார். தற்போது 21 வயது இளைஞனாகிவிட்ட அசார் தனது தாய், சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் அவர்களின் மூன்று பிள்ளைகளுடன் பாந்த்ரா பகுதியில் ஒற்றை அறை வீடு ஒன்றில் வசிக்கிறார்.

ALSO READ  விஜய் சேதுபதி படத்திலிருந்து  விலகினார் அமீர்கான்..!
விற்ற வீடும் இன்று தங்கியிருக்கும் அறையும்

“நான் குடிசைப் பகுதியில்தான் வளர்ந்தேன். ஆனால், திரும்பவும் இந்தக் குடிசைப் பகுதிக்கு வரக் கூடாது என்று நினைத்தேன். சூழல், பொருளாதாரம், கடன் தொல்லை என அத்தனையும் எங்கள் கழுத்தை நெரித்தது. எனக்கு வேறு வழி தெரியவில்லை.

Image result for ஸ்லம்டாக் மில்லியனர்

ஆஸ்கர் புகழைவிட நிஜ வாழ்வின் யதார்த்தம்தான் கண் முன்னே தெரிகிறது. அதனால் வீட்டை விற்றுவிட்டோம். எங்கள் குடும்பத்துக்காகச் சம்பாதிக்க வேண்டியிருக்கிறது” என்கிறார்.

ஸ்லம்டாக் சிறுவன் அசார் அன்றும் இன்றும்

அசாருக்கு நல்ல வாழ்க்கை கிடைத்தும் இவருடைய போதைப்பழக்கம் இவர் எங்கு தன் வாழ்க்கையை ஆரம்பித்தாரோ அந்த இடத்திலேயே கொண்டு வந்து சேர்த்தது, போதைப் பழக்கம் கொண்ட இளைஞர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காவல்துறையைப் பெருமைப்படுத்தி 5 படங்கள் எடுத்ததற்காக மிகவும் வேதனைப்படுகிறேன்: இயக்குநர் ஹரி… 

naveen santhakumar

கொரோனா துயரோடு கலந்த அச்சத்தை கொடுக்கிறது; பிரபல இயக்குநர் ட்வீட் !

News Editor

நண்பர் அஜித் போல் கோர்ட் சூட் அணிந்து வந்தேன் ‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவில்- விஜய்.

naveen santhakumar