சினிமா

இயக்குநராகும் யுவன் சங்கர் ராஜா…விரைவில் அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா விரைவில் இயக்குனராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் இசை அமைப்பாளர்களில் தவிர்க்க முடியாதவர் யுவன் சங்கர் ராஜா.

இசையமைப்பாளர் இளையராஜா மகன் என்ற அடையாளத்தை தாண்டியும், தமிழ் சினிமா இவருக்கென தனி அடையாளம் உள்ளது. 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா காலத்தால் அழியாத பல பாடல்களை கொடுத்துள்ளார்.

‘பியார் பிரேம காதல்’ படம் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமான அவர், தொடர்ந்து நயன்தாரா நடித்த படத்தை தயாரித்த யுவன் சங்கர் ராஜா அடுத்ததாக இயக்குனராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இசையின் ஆளுமையாக விளங்கிவரும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை உருவாக்க தான் ஆசைப்படுவதாகவும் அதன் மூலம் இயக்குனராக இருப்பதாகவும் யுவன் தெரிவித்துள்ளார்.

ALSO READ  பிரபல இசையமைப்பாளர்  முதல் முறையாக பாலா படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்

மேலும் படத்திற்கு ‘Raja The Journey’ என்ற டைட்டில் பொருத்தமாக இருக்கும் என கூறியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்க எனது தேர்வு நடிகர் தனுஷ்தான் என்பதையும் குறிப்பிட்டு உள்ளார்.

இதன் மூலம் விரைவில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“கடவுள் உங்களுடன் இருக்கிறார் கவலை வேண்டாம் சார்” ; எஸ்.ஜே சூர்யா ஆறுதல்!

News Editor

விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படத்தை பார்க்காதீர்கள்…அறிக்கை வெளியிட்ட சிம்பு..!

News Editor

பிரபல நடிகர் படத்தில் நடிக்கும் குக் வித் கோமாளி புகழ் !

News Editor