சினிமா

என்ன தான் இருக்கிறது இந்த பாராசைட்டில்????

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலக சினிமா ஆர்வலர்களின் பாராட்டுகளை வெகுவாக அள்ளி இருக்கிறது ‘பாராஸைட்’.

கொரிய மொழியில் ‘கிசெங்சுங்’ (Gisaengchung) என்ற பெயரில் வெளிவந்த இப்படம், உலக அரங்கில் ‘பாராஸைட்’ என்ற பெயரில் வெளிவந்தது.

‘கிசெங்சுங்’ என்றால் ஒரு வகை குடற்புழு வகை. பணக்காரக் குடும்பத்தினரின் செல்வத்தை அவர்களுடன் இருந்துகொண்டே, அவர்களுக்குத் தெரியாமலேயே உறிஞ்சி எடுக்கும் ஒட்டுண்ணிகளைப் பற்றிய கதை.

சரி, என்ன தான் இருக்கிறது இந்த பாராசைட்டில்.??

தென் கொரியாவில் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் கிம் கி-வூ (Kim Ki-woo). அவனுடைய அப்பா, அம்மா, சகோதரி என்று அவர்கள் நால்வரின் வாழ்க்கையும் மிகச் சிறிய வீட்டில் முடங்கிவிடுகிறது.

கி-வூ வின் நண்பன் மின்-ஹியுக் (Min-hyuk), பெரும் பணக்காரரான பார்க்-ன் பெண் டா-ஹை (Da-hye)க்கு ‘டியூஷன்’ ஆசிரியராக (ஆங்கில ஆசிரியராக) இருப்பான். மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்ததும், அந்த வேலையை கி-வூக்கு சிபாரிசு செய்வான். போலிச் சான்றிதழ் மூலம் அந்த வேலையைப் பெறும் கி-வூ, சாமர்த்தியமாகத் தன் அக்காவை, பார்க்-ன் மகனுக்கு கலை சிகிச்சை (Art therapist) அளிக்கும் வேலைக்குச் சேர்த்துவிடுவான்.

அதைத் தொடர்ந்து அக்கா – தம்பி இருவரும் பல சதி வேலைகள் செய்வார்கள். பார்க் குடும்பத்தின் டிரைவரைத் தந்திரமாக வேலையை விட்டு விரட்டிவிட்டு, தங்கள் அப்பாவை அந்த வேலையில் சேர்த்துவிடுவார்கள். பல ஆண்டுகளாகப் பார்க் குடும்பத்தின் பணிப்பெண்ணாக இருக்கும் கூக் மூன் குவாங்கை(Gook Moon-gwang) வேலையைவிட்டு அகற்றிவிட்டு, தங்கள் தாயையே அந்தப் பணிக்குச் சிபாரிசு செய்து சேர்த்துவிடுவார்கள்.

ALSO READ  பிரபல நடிகருக்கு செல்ல பெயர் வைத்த கார்த்தி !

இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பார்க்கின் குடும்பத்துக்கு தெரியாது. பார்க்கின் குடும்பம் வெளியூர் சென்ற ஒரு நாள் இரவில், கி-வூவின் குடும்பம் அந்தப் பெரும் வீட்டில் சுகபோகமாகக் குடித்து மகிழ்ந்துகொண்டிருக்கும்.

அப்போது அவர்களால் வேலையைவிட்டு விரட்டப்பட்ட கூக் மூன் அங்கே வருவாள். அவளிடமும் ஒரு ரகசியம் இருக்கும். கடனாளிகளுக்குப் பயந்து தன்னுடைய கணவனை அந்த வீட்டினுள் இருக்கும் பதுங்கு குழியில் மறைத்து வைத்திருப்பாள் கூக் மூன்.

அப்படி ஒரு பதுங்கு குழி இருப்பது பார்க்கின் குடும்பத்துக்கே தெரியாது. இதைத் தெரிந்துகொள்ளும் கி-வூவின் தாய், இருவரையும் போலீஸில் பிடித்துக்கொடுக்கப்போவதாக மிரட்டுவாள். அப்போது அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அப்போதுதான் அறிந்துகொள்வாள் கூக் மூன். பதிலுக்கு அவளும் அவர்களை மிரட்டுவாள்.

ALSO READ  93 வது ஆஸ்கர் விழாவில் விருது வென்றவர்களின் முழு விவரம் ! 

இதற்கிடையே, முதலாளியின் குடும்பம், சுற்றுலா ரத்தாகித் திரும்பிவிடும். அதற்குப் பின் அவ்வீட்டிலிருந்த கி-வூவின் குடும்பம்; பாதாள அறையில் வாழும் கூக் மூனின் கணவன் கியன்-சே (Geun-sae) அனைவரும் என்னவானார்கள்?? என்பதை பாராசைட் பார்ந்து தெரிந்து கொள்ளுங்கள்.

கணிக்க முடியாத திரைக்கதை அதை திருப்பங்களுடன் சொல்லி, பார்வையாளர்களைத் திகைக்க வைத்திருக்கிறார் இயக்குநர். அனேகமாக நம்ம ஜீத்து ஜோஸப்பிடம் இது மாதிரி அடுத்து எதிர்பாக்கலாம்.

ஆரம்பம் முதல் மெல்லிய நகைச்சுவை கலந்து விறுவிறுப்பாகச் செல்லும் திரைக்கதை. இறுதி இருபது நிமிடங்களில் கோரம் வன்முறையும் கலந்து தாண்டவமாடும். இறுதிக்காட்சியில் அழுத்தம் இன்னும் அதிகரிக்கும்.

ஒரே திரைக்கதை அதை பல ‘ஜானர்’களுக்கு கடத்திச் செல்லும் சோதனை முயற்சியாக உருவான இப்படம், கேன்ஸ் திரைப்பட விழாவின் மிக உயரிய விருதான ‘பால்ம் டி-ஓர்’ (Palme d’Or) விருது பாங்- ஜுன்-ஹோவுக்கு பெற்றுதந்தது. இவ்விருதைப் பெற்ற முதல் கொரிய இயக்குநர் இவர்தான்.

வசதியான வாழ்க்கை வாழ, நலிந்தவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்பட்சத்தில் அதைத் தக்கவைத்துக்கொள்ள அவர்கள் செய்யும் தந்திரங்கள் எந்த எல்லைக்கும் இட்டு செல்லும் என்று பேசும் படம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டிஸ்கவரி சேனலில் நடிகர் ரஜினிகாந்த்

Admin

பார்த்திபன் இயக்கத்தில் அபிஷேக் பச்சன் :

Shobika

இதிகாச கதைகளில் நடிகை தீபிகா படுகோனே….!!!!

Shobika