சினிமா

‘நெற்றிக்கண்’ ரீமேக்கில் நடிக்க ஆசை: நடிகர் தனுஷ்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் ரஜினியின் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் அதில் தான் நடிக்க விரும்புவதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தன் நடிப்பு மூலமாக உச்சத்தில் இருக்கும் நடிகர் தனுஷ் அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்துவருகிறார். பொங்கலை முன்னிட்டு நாளை தனுஷ் நடித்த ‘பட்டாஸ்’ படம் வெளியாகவுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு, தனுஷின் ‘அசுரன்’ படத்தின் 100வது நாள் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், ராம் குமார், மாரி செல்வராஜ் ஆகியோரின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

ALSO READ  ஏ.ஆர். ரகுமான் தாயார் காலமானார்..!

இந்நிலையில், நடிகர் ரஜினி நடித்து 1981ம் ஆண்டு வெளியான நெற்றிக்கண் படத்தின் ரீமேக்கில் தான் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். நெகடிவ் கேரக்டரில் நடித்தால் எல்லா நேரமும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் ரஜினியின் இந்த பிளேபாய் ரோலை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நடிகர் தனுஷ் , ரஜினி நடித்த மாப்பிள்ளை படத்தின் ரீமேக்கில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘புதிய மாற்றங்கள் வரட்டும்’ பினராயிக்கு மோகன் லால் வாழ்த்து !

News Editor

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி முடிவு.

naveen santhakumar

பிரபாஸோடு நடிக்க முடியாது…வெளிப்படையாக சொன்ன பிரபல நடிகை

Admin