சினிமா

2020 ல் டாப் 10 ட்வீட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த நடிகர்கள், நடிகைகள்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

2020ஆம் ஆண்டு இந்தியாவில் அதிகமாக ரீ-ட்வீட் செய்யப்பட்ட பதிவுகள், ஹேஸ்டேக்குகள் குறித்த பதிவுகளை ட்விட்டர் இந்தியா வெளியிட்டு வருகிறது. அதில் அதிகமாக ரீ-ட்வீட் செய்யப்பட்ட பதிவாக விஜய் நெய்வேலியில் தனது ரசிகர்களுடன் எடுத்த செல்ஃபி உள்ளது. அதேபோல கர்ப்பமாக இருக்கும் அனுஷ்காவுடன் விராட் கோலி இருக்கும் புகைப்படம் அதிக லைக்குகள் பெற்ற இந்திய ட்விட்டர் புகைப்படமாக பதிவாகி உள்ளது. 

ALSO READ  "கோடியில் ஒருவன்" படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு !


அதனை தொடர்ந்து தற்போது ட்விட்டரில் இந்திய அளவில் 2020-ஆம் ஆண்டில் நடிகர்கள் குறித்து பதிவிடப்பட்ட  ட்வீட்களின் டாப் 10 பட்டியலை வெளியிட்டுள்ளது, அதில் முதல் மூன்று இடங்களை  மகேஷ் பாபு, பவன் கல்யாண் மற்றும்  விஜய்  பிடித்துள்ளனர்.

அந்த பட்டியலில்   ஜுனியர் என்.டி.ஆர், சூர்யா, அல்லு அர்ஜுன், ராம் சரண், தனுஷ், மோகன் லால், சிரஞ்சீவி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் உள்ள  பத்து நடிகர்களில் 6 பேர் தெலுங்கு  நடிகர்கள். மூன்று பேர் தமிழ் நடிகர்கள், மலையாளத்தில் மோகன்லால் மட்டுமே இடம் பிடித்துள்ளார். 

ALSO READ  உலகில் 10.93 கோடியாக உயர்ந்த கொரோனா பாதிப்பு தொற்று !

அதனை தொடர்ந்து 2020 ல் நடிகைகள் குறித்து பதிவிடப்பட்ட டாப் 10 பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இதில் முதல் மூன்று இடங்களையும் கீர்த்தி சுரேஷ் ,காஜல் அகர்வால் மற்றும் சமந்தா பிடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை ரஷ்மிக மந்தண்ணா, பூஜா ஹெக்டே, டாப்ஸீ, தமன்னா, ரகுல் ப்ரீத்தி சிங், சுருதிஹாசன் மற்றும் திர்ஷா ஆகியோர்கள் பிடித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகர் கெளதம் கார்த்திக்கின் அடுத்த பட அறிவிப்பு…

News Editor

“தள்ளி போகாதே” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

News Editor

ரூ.50 கோடி இழப்பீடு தர வேண்டும்: ஷெர்லின் சோப்ரா மீது நடிகை ஷில்பா ஷெட்டி வழக்கு

naveen santhakumar