சினிமா

ஹாலிவுட் படத்திற்காக அமெரிக்கா சென்ற தனுஷ்; இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘அந்தோணி மற்றும் ஜோ ரூஸோ’ இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்  எண்ட்கேம் படம் மிக பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தியது. இவர்கள் கேப்டன் அமெரிக்கா, விண்டர் சோல்ஜர், சிவில் வார், அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்  உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். 


‘இந்த நிலையில்தான்  இவர்கள் அடுத்ததாக நாவல் ஒன்றை அடிப்படையாக கொண்டு ‘தி க்ரே மேன்’ என்ற படத்தை இயக்குகின்றனர். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் முதன்மை கதாபாத்திரத்தில் க்றிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் நடிக்கின்றனர். த்ரில்லர் கதைக்களத்தை கொண்ட இப்படத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ்  நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறது. 

இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து தமிழ்த் திரை ரசிகர்கள் மட்டுமின்றி, ஒட்டு மொத்த இந்தியத் திரை ரசிகர்களும் தனுஷிற்கு வாழ்த்துத் தெரிவித்தனர் இப்படத்தின் படப்பிடிப்பானது இந்தாண்டு ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில தொடங்குவதாக இருந்தது. ஆனால் கலிஃபோர்னியா மாகாணத்தில் கொரோனா  வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால், படத்தின் படப்பிடிப்பை படக்குழு ஒத்திவைத்து.

ALSO READ  மீண்டும் வெளியீட்டில் தள்ளிப்போன அயலான் திரைப்படம் ! கவலையில் ரசிகர்கள்....

இந்நிலையில் தற்போது அங்கு கொரோனா பரவல் குறைந்துள்ளதால் இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதில் கலந்துகொள்வதற்காக நடிகர் தனுஷ் இன்று அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் தன் குடும்பத்தினரையும் அழைத்து சென்றுள்ளர். தற்போது இது தொடர்ப்பன புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்படுகிறது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குடியுரிமை சட்டத்திருத்தம் குறித்து நச்சென போட்டோ பதிவிட்ட அமலா பால்…

Admin

ஊரடங்கிலும் ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு செய்தி…

naveen santhakumar

‘ஏலே’ திரைப்படம் நேரடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பு..!

News Editor