சினிமா

“மாறா” படத்தின் டிரைலர் வெளியீடு…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


மலையாளத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு மார்டின் ப்ராகாட் இயக்கத்தில் துல்கர் சல்மான் , பார்வதி மேனன் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் ‘சார்லி’. இந்த படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை  பெற்றது. ஆகையால் சார்லி படத்தின் தமிழ் ரீமேக்கை பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா இணைந்து, பிரமோத் ஃபிலிம்ஸ் சார்பாகத் தயாரித்துள்ளனர்.

‘சார்லி’ படத்தை இயக்குநர் திலீப் குமார் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் இருவரையும் வைத்து தமிழில் இயக்கிருக்கிறார்.  இவர்களுடன் ஷிவதா, மௌலி, அலெக்ஸாண்டர் பாபு, எம்.எஸ்.பாஸ்கர், குரு சோமசுந்தரம், கிஷோர் மற்றும் அபிராமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்திங்களில் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்துக்கு ‘மாறா’ என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் படக்குழு ‘மாறா’ படத்தினை  நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியிட திட்டமிட்டது. அதன்படி, அமேசான் ப்ரைம் நிறுவனத்துடன் அதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது. படம் டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாகும் எனக் கடந்த அக்டோபர் மாதம் அறிவித்திருந்தது அமேசான் நிறுவனம். 

ALSO READ  கௌசல்யாவிடம் ரூ.1 கோடிக்காக கேட்கப்பட்ட கேள்வி என்ன தெரியுமா?

இதனையடுத்து தற்போது ‘மாறா’ திரைப்படத்தின் வெளியீட்டில் தேதியில்  மாற்றம் செய்த அமேசான் நிறுவனம் படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் “மாறா” படத்தின் டிரைலரை தற்போது வெளியிட்டுள்ளது படக்குழு. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

#maara #madhavan #maaratamilmovie #maaratrailer #Tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“விக்ரம் 60” படத்தில் இணையும் வாணி போஜன் ! 

News Editor

‘ஹாட் பியூட்டி’ ஸ்ருதிஹாசன் தன் பெயரை டாட்டூ குத்திய இடத்தை பார்த்தீர்களா….

Admin

மாபெரும் வெற்றி பெற்ற இந்தி பட ரீமேக்கில் நடிக்கும் உதயநிதி !

News Editor