சினிமா

கொரோனா தாக்கத்தின் காரணமாக நடிகர் பிரபாஸ் படம் தள்ளிவைப்பு :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ராதா கிருஷ்ணகுமார் இயக்கி உள்ளார்.

அதிகமான பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை வருகிற ஜூலை 30-ந் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 

தற்போது கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், “ராதே ஷ்யாம்” படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி உள்ளதால் இப்படம் தியேட்டரில் தான் வெளியிடப்படும் என படக்குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


Share
ALSO READ  கோலாகலமாக நடைபெற்ற "கேன்ஸ் திரைப்பட விழா"
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘கோடியில் ஒருவன்’ பாடத்தின் படப்பிடிப்பு நிறைவு 

News Editor

அஜித் காஞ்சிபுரம் போலீசார் உடன் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரல்

Admin

இனிமே டாட்டூ குத்துவேன்…..அனால் எந்த நாதாரி பெயரையும் குத்தமாட்டேன்…..வனிதா அதிரடி….

naveen santhakumar