சினிமா

தேர்தலில் ரஜினியுடன் கூட்டணி : கமல்ஹாசன் பேட்டி 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டிசம்பர் மாதம் 31-ம் தேதி அரசியல் கட்சி தொடங்குவதற்கான தேதியை அறிவிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்த நிலையில் இன்று அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்று அறிவித்து அவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார். இதனையடுத்து ரஜினியின் இந்த முடிவை  பலவேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வரவேற்றுள்ளனர்.

அண்மையில் இது குறித்து பேசிய நடிகர் கமல்ஹாசன் “ரஜினி எடுத்த முடிவில் சற்று ஏமாற்றம் இருந்தாலும் அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம். காமராஜருக்கு பிறகு வந்த அனைவருமே சினிமாக்காரர்கள்தான். மக்கள் அளித்த வரவேற்பை பார்க்கும் போது தமிழகத்திற்கு மாற்றம் நெருங்கிவிட்டது என்பதை உணர்த்துகிறது. என் ரஜினி நலமாக இருக்க வேண்டும், எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும். பிரச்சாரப் பயணம் முடிந்த பிறகு சென்னை சென்றவுடன் அவரை சந்திப்பேன்” என்று கூறினார்.


இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் என்று தெரிவித்தார். மேலும், ”சென்னை சென்றதும் ரஜினியை சந்திப்பேன். திராவிடம் யாருக்கும் சொந்தமில்லை. அனைவருக்கும் பொதுவானது. ஆன்மிகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் என யாரும் என்னை நிர்பந்திக்க முடியாது. பகுத்தறிவை ஏற்றுக்கொள்ளுமாறு நானும் யாரையும் நிர்பந்திக்க முடியாது. ஆனால் ஆன்மிகத்திற்கும் எனக்கும் விரோதம் கிடையாது” என்றார்


Share
ALSO READ  அப்டேட் கொடுத்த 'அயலான்' படக்குழு !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஸ்விமிங் போட்டோஸ் வெளியிட்ட ப்ரணிதா.

naveen santhakumar

ஜெனிலியா செம்ம ஜாலியா : காதில் புகைவிடும் மற்ற நடிகைகள் !!!!!

naveen santhakumar

செம்பருத்தி சீரியலில் இருந்து கார்த்தி நீக்கம்….. ஜீ தமிழின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

News Editor