சினிமா

தமிழில் வெளியாகிறது “ஷகிலா”வின் வாழ்கை திரைப்படம் 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியில் எடுக்கப்பட்ட நடிகை “ஷகிலா”வின் வாழ்க்கை திரைப்படம், தமிழில் மொழிமாற்றம் செய்து கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியிடப்படவுள்ளது.


சகிலா 1990 களில் அடல்ட்ஸ் படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் திரைத்துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து, மிகப்பெரிய ரசிகர் கூட்டங்களை கையில் வைத்திருந்தார். சகிலா முதலில் ‘ப்ளே கேர்ள்ஸ்’ படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனையடுத்து  சகிலா  நடித்த படத்தின் விளைவாக  அவரது சொந்த குடும்பத்தினராலேயே  புறக்கணிக்கப்பட்டார், பின்னர்  ஷகிலாவின் படங்களை தடை செய்ய வேண்டும் என திரையுலகினரே போராடியது உள்ளிட்ட அவரது வாழ்வின் அனைத்து பக்கங்களையும் திரைப்படமாக்கியுள்ளார் கன்னட இயக்குநர் இந்திரஜித் லோகேஷ்.

ALSO READ  ராக்கி பட வெளியிட்டு உரிமையை கைப்பற்றியது விக்னேஷ்சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிச்சர்ஸ்

இந்த படத்தில் ரிச்சா சத்தா, பங்கஜ் திரிபாதி, எஸ்தர் நொரான்கா, ராஜீவ் பிள்ளை, ஷீவா ரானா, கஜோல் சக் மற்றும் சந்தீப் மலானி உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படத்தை ஷம்மி நன்வானி, சரவண பிரசாத் இணைந்து தயாரித்துள்ளார்கள். படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்களில் டைட்டில் பாடலை பாலிவுட் இசையமைப்பாளர் மீட் ப்ரோஸ் இசையமைத்துள்ளார். மற்ற இரண்டு பாடல்களை இசையமைப்பாளர் வீர் சமர்த் இசையமைத்துள்ளார்.

நேரிடையாக இந்தி மொழியில் எடுக்கப்பட்ட இப்படம், ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியாகவுள்ளது. மலையாள பதிப்பு கேரள மாநிலத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னர் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. சென்சாரில் ‘A’ சான்றிதழ் பெற்றிருக்கும் இத்திரைப்படம் தணிக்கைக் குழுவினரின் பாராட்டையும் பெற்றுள்ளது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சூரியா-ஜோதிகாவின் ரீல் மகள்…. இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா????

naveen santhakumar

அரசியலில் குதிக்க போகும் பிரபல நடிகை?

Shanthi

அமெரிக்காவிற்கு புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த் :

Shobika