சினிமா

டான் படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயன் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவரது நடிப்பில்  ‘டாக்டர்’ மற்றும் ‘அயலான்’ படங்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபி சக்கரவகார்த்தி இயக்கும் புதிய  படத்தில் நடித்து வருகிறார்.

இவர்  இயக்குனர் அட்லீயின் மெர்சல், மற்றும் பிகில் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. டான் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ப்ரியங்கா மோகன் நடிக்கிறார்.

சிவகார்த்திகேயனின் 19வது படமாக உருவாகும் இப்படத்தை, லைகா புரொடக்‌சன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா, சிவகார்த்திகேயன் புரொடக்‌சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு, பிப்ரவரி 2ஆம் வாரத்தில் இருந்து கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்று வரும் நிலையில், இன்று, பிப்ரவரி 17ஆம் தேதி, தனது பிறந்தநாளை முன்னிட்டு ‘டான்’ படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடினார் சிவகார்த்திகேயன். இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


Share
ALSO READ  'கோடியில் ஒருவன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகை சம்யுக்தாவுக்கு கொரோனா தொற்று !

News Editor

தடை இருந்தும் எளிதாக ஆசிட் வாங்க முடிகிறது : தெரிக்கவிட்ட தீபிகா

Admin

யோகிபாபுக்கு திடீர் திருமணம்

Admin