சினிமா

விவேக்கின் மறைவுக்கு நடிகர் வடிவேலு கண்ணீர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார். தனது 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் மக்களுக்கு தேவையான  மூடநம்பிக்கை, லஞ்சம், ஊழல் உள்ளிட்ட சமூக ரீதியான கருத்துக்களை தனது காமெடி மூலம் அனைவரிடத்திலும் கொண்டு சேர்த்தவர்.

இந்நிலையில் நடிகர் விவேக் நேற்று நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதனையடுத்து அவருக்கு எக்மோர் கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நடிகர் விவேக் இன்று காலை 4.35 மணியாளவில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இதனையடுத்து இவரின் இறப்பிற்கு திரைப் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

அந்தவகையில் விவேக்கின் மறைவுக்கு நடிகர் வடிவேலு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என் நண்பன் விவேக் மாரடைப்பால் இறந்துட்டான் என்று இன்றைக்கு காலையில் செய்திகளில் பார்த்து தெரிந்து கொண்டேன். அந்த செய்தியைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகிவிட்டது. அதை பற்றி பேசவே முடியவில்லை. அவன் இல்லையே என்று நினைக்கும் போது, எனக்கு துக்கம் தொண்டையை அடைக்கிறது. எனக்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் அவனும் ஒருவன். நானும் அவனுக்கு ரசிகன் தான். என்னால் அவனுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை. என் நெஞ்சார்ந்த இரங்கலை அவன் குடும்பத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன்’’ எனக் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

ALSO READ  காக்க காக்க 2 - எனக்கு தெரியாம நான் நடிக்கிற படமா? - கௌதம் வாசுதேவ மேனன் அதிர்ச்சி !

#Corona #Coronavaccine #TamilThisai #Tamilcinema #Cinema #Cinemanews #Tamilnadu #Vivek #Kollywood #RIPviveksir #vairamuthu #Kamalhaasan #Tamilmovie #VADIVELU


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சூரியிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி:

naveen santhakumar

கொண்டாட்டத்தில் சூர்யா, ஜோதிகா ரசிகர்கள்… தூள் பறக்கும் ட்விட்டர்!

naveen santhakumar

வனிதா விலகல்…நோ கமெண்ட்ஸ்….!!!

Shobika