சினிமா

தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகும் கொரோனா வரலாம்; நடிகர் விவேக் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தியா முழுவதும் தொடக்கத்தில் அதிகரித்து வந்த கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனை தடுக்கும் பொருட்டு மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியை துரித படுத்து வருகிறது. 

இந்நிலையில் நடிகர் விவேக் மற்றும் அவரது குழுவினர் செ‌ன்னை ஓமந்தூரர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதனையடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் விவேக், நான் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளேன். ஏனெனில் அரசு மருத்துவமனைகள் தான் பெரும்பாலான மக்களுக்கு சிறப்பான தரமான சேவையை செய்து வருகிறது.

கொரோனா தடுப்பூசி பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நேற்று ஒரே நாளில் 7,819 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் அவசியம். இரண்டு தவணைகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இரண்டு வாரங்களுக்கு பின்னர் நம் உடலில் எதிர்ப்பு சக்தி வரும். தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகு கொரோனா வரலாம், ஆனால் உயிரிழப்பு இருக்காது என்றார். மேலும் அரசு சொல்லும்வரை முகக்கவசம் அணிவதை   கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார். 

ALSO READ  மீண்டும் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி..!

#Vivek #Coronavirus #Coronapositive #TamilThisai #vaccine #covid19 #Tamilnadu #Covaccine

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

என்ன திட்டாதீங்கப்பா..முடியல; கர்ணன் பட நடிகர் ட்வீட் !

News Editor

உடலில் ஆடைகள் ஏதுமின்றி பில்லோவுடன் தமன்னா வெளியிட்ட புகைப்படம்….

naveen santhakumar

wow… இதுதான் சினேகாவின் 2வது குழந்தை பெயரா?

Admin