சினிமா

கொரோனா பாதிப்பால் பிரபல நடிகரின் தந்தை மரணம்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், பிரபல நடிகரின் தந்தை கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

குட்டிப்புலி, வேதாளம், திருடன் போலீஸ், டார்லிங், ஒருநாள் கூத்து, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஈஸ்வரன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் நடிகர் பால சரவணன்.

பிரபல நடிகரின் தந்தை கொரோனாவால் மரணம்!

இந்நிலையில், இவரது தந்தை எஸ்.ஏ. ரங்கநாதன் (60) கொரோனா தொற்று காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ALSO READ  பிரிட்டன் விமான சேவைக்கான தடையை நீடித்தது : மத்திய அரசு 

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர், இன்று (11.06.2021) சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது இந்த திடீர் மறைவுக்குப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இவரது உடல் இன்று மாலை தகனம் செய்யப்படவுள்ளது.

கடந்த மாதம் பால சரவணனின் தங்கையின் கணவர் கொரோனாவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 32 தான்.

ALSO READ  "பா வேந்தன்" எஸ்.பி.பி.யின் 75-வது பிறந்தநாள்…! 

நடிகர்கள் வெங்கட் சுபா, நிதிஷ் வீரா, மாறன், பவுன்ராஜ், குட்டி ரமேஷ், அருண்ராஜா காமராஜின் மனைவி என பலர் கொரோனாவால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிம்புவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு..!

News Editor

திரையரங்கில் 100 % பார்வையாளர்களுக்கு அனுமதி ; முதல்வருக்கு நன்றி தெரிவித்த பாரதிராஜா…!

News Editor

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகை ரம்யா பாண்டியன் !

News Editor