சினிமா

யாரையும் தரம் தாழ்த்தி பேசாதீர்கள்….வருத்தப்படும் முத்தழகு…!!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘பருத்திவீரன்’ படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்று முன்னணி நடிகையாக உயர்ந்த பிரியாமணி, திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் சினிமாவில் தான் சந்தித்த இன்னல்கள் குறித்து சமீபத்திய பேட்டி ஓன்றில் கூறியுள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், “சினிமா துறை போட்டி நிறைந்தது. நான் சினிமாவுக்கு வந்த புதிதில் கடினமாக உழைத்து மெதுவாக முன்னேறினேன். நேர்மையாக உழைத்தால் என்றாவது வெற்றி வரும். திருமணம் எனக்கு நடிக்க தடையாக இல்லை. கணவர் உதவியாக இருப்பதால் தொடர்ந்து நடிக்க முடிகிறது.

திருமணத்துக்கு பிறகுதான் அதிக வாய்ப்புகள் வருகிறது. திருமணமான நடிகைகள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சீனியர் நடிகையான நயன்தாராவும் நல்ல கதைகளில் நடிக்கிறார். திருமணம் ஆனவர் ஆகாதவர் என்ற வித்தியாசம் சினிமாவில் இல்லை.திறமை இருந்தால் ஜெயிக்கலாம். எனக்கு வயதாகிவிட்டது என்றும் குண்டாக இருக்கிறேன், கருப்பாக இருக்கிறேன் என்றும் விமர்சிக்கின்றனர். அப்படி பேசுவது மனதுக்கு கஷ்டமாக உள்ளது. யாரையும் தரம் தாழ்த்தி பேசாதீர்கள். கருப்பும் அழகுதான்”. இவ்வாறு பிரியாமணி கூறினார்.


Share
ALSO READ  விஜயின் பாடலை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்த சூர்யாவின் பாடல் 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கர்ணன் படத்தின் அடுத்த அப்டேட் வெளியீடு !

News Editor

விரைவில் அனைவரையும் மிரட்ட வருகிறது அரண்மனை-3……

Shobika

சீதை வேடத்தில் நடிக்க 12 கோடி சம்பளம் கேட்டு அதிர்ச்சி ஏற்படுத்திய நடிகை கரீனா….

Shobika