சினிமா

எப்படி இருந்த நா இப்படி ஆயிட்டேன்; கதறும் ரைசா வில்சன் ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாடல் அழகியான ரைசா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார். அதனையடுத்து இயக்குனர் எலன் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 படத்திலும், துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான வர்மா படத்திலும் நடித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா வில்சன் அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருவது வழக்கம்.

இந்நிலையில் நடிகை ரைசா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், அவரின் முகம் வீக்கமடைந்துள்ளது. அப்புகைப்படத்துடன்,”நான் முகத்துக்கு எளிமையான முறையில் பேசியல் செய்ய அழகுக்கலை நபர்களிடம் சென்றேன். அப்போது அங்கு வேலை பார்க்கும் பெண் ஒருவர்  எனக்கு விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி சில அழகு செயல்முறைகளை செய்தார். அதன் விளைவாக எனது முகம் வீங்கி விட்டது.

ALSO READ  'விஜய்'யின் மாஸ்டர் படத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ள தனுஷ்...!

பின்னர் அந்தப் பெண்ணை தொடர்பு கொண்ட போது என்னை சந்திக்கவோ என்னுடன் பேசவோ அவர் மறுத்துவிட்டார். மேலும் அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் கேட்டபோது அவர் வெளியூர் சென்று விட்டதாக  கூறுகிறார்கள்” என பதிவிட்டுள்ளார். 

#tamilcinema #cinema #cinemanews #Cineupdate #TamilThisai #raizawillson #Kollywood #Cinenews #Cinemaupdate


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தீபிகா படுகோனே இவ்வளவு அழகா?

News Editor

கொரோனா நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கிய அஜித் !

News Editor

வெற்றிமாறன் படத்தில் நடிக்க முடியாது …! விலகிய பிரபலம்… !

News Editor