சினிமா

‘ஏலே’ திரைப்படம் நேரடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் ஹலீதா ஷமீம்  ‘பூவரசம் பீப்பீ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக  அறிமுகமானர். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘சில்லுக் கருப்பட்டி’. ஆந்தாலஜி வகைத் திரைப்படமாக எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதனையடுத்து, ஹலீதா ஷமீம் இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம் ‘ஏலே’. தயாரிப்பாளர் சசிகாந்த் உடனிணைந்து புஷ்கர்-காயத்ரி தயாரிக்கும் இப்படத்திற்கு கேபர் வாசுகி, அருள்தேவ் ஆகியோர் இசையமைத்துள்ளார். அண்மையில் வெளியாகிய படத்தின் ட்ரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதனையடுத்து  பிப்ரவரி 12-ஆம் தேதி ஏலே திரைப்படத்தை திரையரங்கில் வெளியாக இருந்தநிலையில்   அதனை மாற்றி வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி பல்வேறு விதிமுறைகளைக் காரணம் காட்டி விஜய் டிவியில் பிப்ரவரி 28ம் தேதி அன்று வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ALSO READ  ஓய்வு நேரங்களில் துப்பாக்கி சூட்டில் ஈடுபடும் தல அஜித்:

அதில், “ ஏலே திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக மூன்று நாட்களே இருந்த நிலையில் சில ஆச்சர்யகரமான புதுவிதிகளாலும், தவிர்க்க முடியாத சில காரணங்களாலும் படத்தை திரையரங்கிற்கு கொண்டு வர முடியாத நிலை உருவாகியுள்ளது. ஆகையால் திரையரங்குகளை தவிர்த்து எங்கள் படத்தினை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு எடுத்து செல்ல வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. 

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியுடன் இணைந்து 2021 பிப்ரவரி 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 3 மணிக்கு உலக தொலைக்காட்சிகளில் முதல்முறையாக நேரடியாக இத்திரைப்படத்தினை வெளியிடுகிறோம். திறமையாளர்களுக்கு வாய்ப்புகளையும், ரசிகர்களுக்கு தரமான கதைகளையும் திரையரங்கு உட்பட அனைத்து தளங்களிலும் வழங்குவதில் எங்கள் நிறுவனம் எப்போதும் முனைப்புடன் செயல்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சூர்யா 40 படத்தில் இந்த நடிகையா…???????

naveen santhakumar

“விஜய்” படத்தால் பாதிக்கும் சிலம்பரசன்…!

News Editor

ஆடம்பர செலவுகளால் ஒரே ஆண்டில் பணத்தை இழந்த நடிகை

Admin