சினிமா

மீண்டும் இணையும் கொம்பன் பட கூட்டணி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

முத்தையா ‘குட்டிப்புலி’ படத்தின் மூலம், தமிழ் சினிமாவிற்கு இயக்குநராக அறிமுகமானார்.  அதனையடுத்து நடிகர் கார்த்தி நடிப்பில் கொம்பன், கெளதம் கார்த்தி நடிப்பில் தேவராட்டம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார்.

இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம்  ‘புலிக்குத்தி பாண்டி’. நேரடியாக சன் டிவியில் வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இந்த நிலையில், முத்தையா அடுத்து இயக்கும் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இயக்குநர் முத்தையா இயக்கவுள்ள அடுத்த படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் கார்த்திக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர்களது கூட்டணியில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான கொம்பன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை கூட்டியுள்ளது.

ALSO READ  முதல் டோஸ் செலுத்திக்கொண்டார் நடிகர் கார்த்தி…!
SONY DSC

தற்போது, இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறதாம். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது

#Karthi #Komban #TamilThisai #Tamilcinema #cinema #cinemanews #CinemaTrending #CineUpdate #Muthaiah #lakshimenon #kollywood


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“ஓ மை கடவுளே” படத்தின் இயக்குநர் கொடுத்த அப்டேட்…!

News Editor

பிரபல தெலுங்கு இயக்குநருடன் இணையும் விஜய்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு !

News Editor

நேரடியாக டிவியில் வெளியாகும் ஜி.வி.பிரகாஷ் திரைப்படம் !

News Editor