சினிமா

முதலில் ‘வலிமை’யை பார்ப்போம்; பிறகு அடுத்த பட கதையை கேட்போம்-அஜித்தின் திடீர் முடிவு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அஜித், ஹெச்.வினோத், இவர்கள் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் வலிமை. இப்படத்தினை பிரபல தயாரிப்பாளர் போனிகபூர்  தயாரித்து வருகிறார்.  மேலும் இவர்கள்  கூட்டணியில் “நேர்கொண்ட பார்வை” திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் இவர்கள் கூட்டணி இணைந்துள்ளதால் “வலிமை” படத்தின் மீது கூடுதல் எதிர்பார்புகள் எழுந்துள்ளது. 

ALSO READ  கௌசல்யாவிடம் ரூ.1 கோடிக்காக கேட்கப்பட்ட கேள்வி என்ன தெரியுமா?

இப்படத்தில்   அஜித்துக்கு  ஜோடியாக ஹுமா குரேஷி நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேய வில்லனாக நடிக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். 

வலிமை படத்துக்கு பின் அஜித் நடிக்கும் தல 61 படத்தை இயக்குநர் வினோத் தான் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால், இதுவரை நடிகர் அஜித் அடுத்த படம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் வலிமை படம் முடிந்த பிறகே அடுத்த படத்திற்கான கதையை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சில புதிய சவ்ஹிருதங்கள்- நடிகரின் புதிய அணில் நண்பன் …!

naveen santhakumar

“கர்ணன்” படம் வெளியாவதில் சிக்கல்.!

News Editor

பியர் கிரில்ஸுடன் காட்டுக்கு செல்லும் அந்த பிரபல நடிகர்!

News Editor