சினிமா

வலிமைன்றது அடுத்தவன காப்பாத்ததான்; அழிக்க இல்ல…கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!

Valimai
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நேர்கொண்ட பார்வை படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியைத் தொடர்ந்து அஜித் குமார், போனிகபூர், ஹெ.வினோத் கூட்டணி வலிமை படத்தில் ஒன்றினைந்தது. கார்த்திகேயா வில்லனாக நடிக்க, ஹுமா குரேஷி, யோகி பாபு, புகழ், சுமித்ரா, ராஜ் அய்யப்பா உள்ளிட்ட் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கான அப்டேட்டுகளை கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்கள் கேட்டு, உலகளவில் டிரெண்ட் செய்தனர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் முதல் கால்பந்து மைதானம் வரை என வலிமை அப்டேட்டை கேட்டு ரசிகர்கள் அதகளப்படுத்தினர். திருச்செந்தூர் முருகனில் இருந்து பிரதமர் மோடி வரை அப்டேட் கேட்டு வந்தனர்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலான அஜித் ரசிகர்களின் காத்திருப்புக்கு பலனாக யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்தப் படத்தில் இருந்து இரண்டு பாடல்கள், விசில் தீம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ALSO READ  வெளியானது ‘பொன்னியின் செல்வன்’ ; யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரங்கள்?

யுவன் சங்கர் ராஜாவின் மிரட்டும் இசையில், டிரெய்லரின் தொடக்கமே பைக்ரேஸ் காட்சிகள் மிரட்டுகின்றன. போலீஸ் அதிகாரியாக வருகிறார் நடிகர் அஜித். ‘வலிமை என்பது அடுத்தவனை காப்பாத்துவதற்கு தான், அடுத்தவன அழிக்க இல்ல’ என அவர் பேசும் வசனம், ரசிகர்களை புல்லரிக்க வைத்துள்ளது. ,


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கர்ணன் படத்தின் அடுத்த அப்டேட் வெளியீடு !

News Editor

2 டோஸ் தடுப்பூசி போட்டும் நடிகை ஷெரினுக்கு கொரோனா..!

naveen santhakumar

நிவேதா பெத்துராஜின் புகார் எதிரொலி…..

Shobika