சினிமா

வலிமை ரிலீஸ் – தள்ளிப்போனதற்கான காரணம் என்ன?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தின் வெளியீட்டுத் தேதியை போனி கபூர் அறிவித்துள்ளார்.

Valimai First Motion Poster Out; Thala Ajith Looks Fierce in Every Frame  (Watch Video) | ? LatestLY

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித்குமார், எச்.வினோத், போனி கபூர் இணைந்த படம் வலிமை. இதற்கான படப்பிடிப்பு 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. பின்னர் இரண்டு ஊரடங்குகளைக் கடந்து வலிமை படக்குழு படப்பிடிப்பை முடித்தது.

இதனால் வலிமை தீபாவளி வெளியீடு, கிறிஸ்துமஸ் வெளியீடு என்று பல்வேறு வெளியீட்டுத் தகவல்கள் வெளியாகி வந்தன.

ALSO READ  துப்பறிவாளராக மாறிய நடிகை கஸ்தூரி:

இந்த நிலையில் வலிமை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்துள்ளார். இந்தப் படத்தை தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி வெளியிட திட்டமிட்ட நிலையில், ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்துடன் வலிமை வெளியிட வேண்டாம் என அஜித் கூறியதால் வலிமை படத்தின் வெளியீடு பொங்கலுக்கு தள்ளிச் சென்றுள்ளது.

Will Thala Ajith's Valimai lock horns with Annaatthe? - Only Kollywood

கடந்த 2019 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளியாகின. இதனால் இருவரின் ரசிகர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கடுமையான வார்த்தைகளால் சாடிக்கொண்டனர். இதனை அஜித் விரும்பபில்லை.

ALSO READ  நடிகை நிவேதா தாமஸுக்கு கொரோனா தொற்று !

அடுத்ததாக அந்தப் படத்தை அஜித்தின் நண்பர் சிவா இயக்கியுள்ளார். இந்த இரண்டு காரணங்களாலே வலிமை படத்தை தீபாவளிக்கு வெளியிட வேண்டாம் என்று உறுதியாக கூறியுள்ளார்.

இதனிடையே பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 100 நாட்களுக்கு மேல் இருப்பதால் ரசிகர்களை திருப்திபடுத்த படத்தின் Glimlse, டீசர், டிரைலர் ஆகியவற்றை அடுத்தடுத்து வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உருவாகிறது அரண்மனை-4….படப்பிடிப்பு விரைவில்….!!!

Shobika

ராணா டகுபதி – மிஹீகாபஜாஜ் திருமண வைபவ புகைப்படங்கள்… 

naveen santhakumar

முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

News Editor