சினிமா

சமுத்திரக்கனியுடன் ஜோடி சேரும் வனிதா விஜயகுமார் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘அந்தாதூன்’ திரைப்படம் கடந்த 2018 ஆண்டு இந்தியில் வெளியானது. அந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர்கள் நடித்திருந்தனர். இதனை இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கிருந்தார். “அந்தாதூன்” திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது, ரூ 40 கோடிக்கு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரூ 450 வசூல் செய்தது. அதனையடுத்து விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது. 

ALSO READ  நடிகர் "பரத்" நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியீடு !

இப்படத்திற்கு இந்தியில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் நடிகர் பிரசாந்த், சிம்ரன் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்த வருகின்றனர். “அந்தகன்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரசாந்தின் தந்தையும் நடிகருமான தியாகராஜன் இயக்கி வருகிறார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் சமுத்திரக்கனி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். 

இந்நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் இப்படத்தில் நடிக்கவுள்ளார். இதில் நடிகர் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக இப்படத்தில் வனிதா விஜயகுமார் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விக்ரம் படத்தின் கதையில் மாற்றம் செய்த கமல் !

News Editor

“கோடியில் ஒருவன்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

News Editor

‘தலைவா’ என ரஜினிகாந்த்-க்கு நன்றி சொன்ன TwitterIndia….

naveen santhakumar