தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘அந்தாதூன்’. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார்.
இவருடன் சிம்ரன், பிரியா ஆனந்த், வனிதா, இயக்குனர் K.S.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அடுத்தகட்டமாக பின்னணி வேலைகளை முழுவீச்சில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.