சினிமா

அல்லு அர்ஜுன் சகோதரரை காதலிக்கும் அணு இமானுவேல் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகை அணு இமானுவேல் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் இவரின் நடிப்பு தமிழக இளைஞர் மத்தியில் பெரிது பேசப்பட்டது.

இப்படத்தை தொடர்ந்து சித்தார்த் நடிக்கும் மகாசமுத்திரம் படத்தில் நடித்து வருகிறார். அண்மை காலமாக தெலுங்கு திரையுலகில் நடிகர் அல்லு சிரிஷும் நடிகை அணு இமானுவேலும் ரகசியமாக காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. நடிகர் அல்லு சிரிஷ் சிரஞ்சீவியின் மைத்துனரும், அல்லு அர்ஜுனின் சகோதரரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் அணு இமானுவேல் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி வீடியோ ஒன்றை நடிகர் அல்லு சிரிஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இருவரும் நெருக்கமாக செல்ல பெயர் வைத்து அழைத்து கொள்வது போன்றவை இடம் பெற்றுள்ளன. இதனை தெலுங்கு திரையுலகினர் இருவரும் காதலிப்பதை கிட்டத்தட்ட உறுதி படுத்தியுள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ  'கோமகனின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்'; இயக்குநர் சேரன் இரங்கல் !

#NammaVeettuPillai #SIvakarthikeyan #Tamilcinema #TamilThisai #AnuEmmanuel #AlluSirish #AlluArjun #Seeranjivee #Telugumovie #cinema #CInenews #CineUpdate


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலியின் வேதனை….!!!

Shobika

இயக்குனர் கே.வி ஆனந்த் படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் !

News Editor

நடிகர் கௌதம் கார்த்தியின் செல்போன் மர்ம நபர்களால் பறிப்பு:

naveen santhakumar