சினிமா

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி ரசிகர்களை கவருகிறார் அனுஷ்கா ஷெட்டி:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உடல் எடையை வெகுவாக குறைத்து மீண்டும் பயங்கர ஸ்லிம்மாக மாறியுள்ளார் நடிகை அனுஷ்கா.

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா. இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டமே உள்ளது. நம்பர் ஒன் நாயகியாக வலம்வந்து கொண்டிருந்த அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை கூட்டி, பின்னர் உடல் எடையை குறைக்கமுடியாமல் சிரமப்பட்டார்.

பாகுபலி இரண்டாம் பாகத்தில் கூட தொழிநுட்ப உதவியால் அனுஷ்காவை ஒல்லியாக காட்டி இருந்தது படக்குழு. அதன்பிறகு அதிக உடல் எடை காரணமாக அனுஷ்காவிற்கு பெரியதாக படவாய்ப்புகள் அமையவில்லை. அனுஷ்காவின் பெயரை சொன்னாலே தயாரிப்பாளர்கள் நோ சொல்லும் அளவிற்கு தள்ளப்பட்டார்.இதனிடையே பாகுபலி நாயகன் பிரபாஸுடன் அனுஷ்காவை சேர்த்து வைத்து காதல் கிசுகிசுக்களும் கொடிகட்டி பறந்தது. 

ALSO READ  நடிகை அனுஷ்கா சினிமாவை விட்டு விலக முடிவு?... 

ஒருகட்டத்தில் இனி அனுஷ்கா அவ்வளவுதானா???? என வருத்தப்பட்ட ரசிகர்களுக்கு தற்போது இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் அனுஷ்கா.ஆம்….தீவிர உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, யோகா என பலமுயற்சிகளை மேற்கொண்டு தற்போது மீண்டும் தனது பழைய தோற்றத்திற்கு திரும்பியுள்ளார். அவரின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கிய நடிகைக்கு 20 லட்ச ரூபாய் அபராதம்…!!!!

Shobika

நண்பர்களுடன் ஆனந்தமாய் குளிக்கச் சென்ற நடிகருக்கு நேர்ந்த சோகம் :

naveen santhakumar

OTT-ல் ரிலீசாகும் ஜி.வி.பிரகாஷின் புதிய படம் :

Shobika