சினிமா

விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய படக்குழு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

நடிகர் உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்குனர் அருண்ராஜா காமராஜ் புதிய படத்தை இயக்க உள்ளார். இப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் வெளியாகி ‘ஆர்டிகள் 15’ என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடித்த இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு விருதுகளை வென்றது.

ALSO READ  'மறக்கமுடியாத அந்த நாட்கள்' விவேக் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் ! 


இந்நிலையில் இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு படக்குழுவினர் அனைவரும் இணைந்து மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

#UthayanithiStalin #BoneyKapoor #tamilcinema #TamilThisai #Vivek #Article15

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சமுத்திரக்கனியுடன் ஜோடி சேரும் வனிதா விஜயகுமார் !

News Editor

தொடர்ந்து OTT-யில் மண்ணைக்கவ்வும் படங்கள்….வருத்தத்தில் கீர்த்தி சுரேஷ்…

naveen santhakumar

ரசிகர்கள் வங்கிக் கணக்கில் 5,000 ரூபாய் நிதி உதவி செலுத்திய நடிகர் விஜய்….

naveen santhakumar