சினிமா

அப்டேட் கொடுத்த ‘அயலான்’ படக்குழு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ’அயலான்’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார் பணப்பிரச்சனை காரணமாக பாதியில் முடங்கிய இப்படத்தின் பணிகள், கொரோனா நெருக்கடிநிலை காரணமாக நீண்ட நாட்களாகவே கிடப்பில் இருந்தது.

ALSO READ  மரண வெயிட்டிங்கில் வடிவேலு ஃபேன்ஸ்.. 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' லேட்டஸ் அப்டேட் இதோ1

அதனையடுத்து படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ‘அயலான்’ படத்தின் ரிலீஸ் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் சார்ந்த காட்சிகள் நிறைய உள்ளதால், படப்பிடிப்பு நாட்களுக்கு இணையான நாட்கள் படத்தின் சி.ஜி பணிகளுக்குத் தேவைப்படுகிறது. எனவே, படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைந்தாலும், படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் இந்தாண்டின் இறுதியில்தான் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் நாளை தனது  பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, அயலான் படத்தின் முதல் பாடலை அன்றைய தினத்தில் வெளியிட படக்குழுத் திட்டமிட்டுள்ளது. இத்தகவலை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

ALSO READ  சசிகுமார் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பிரபல இயக்குனர்..!


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்திய ராணுவத்தின் புதிய Tour Of Duty திட்டத்திற்கு பிரணிதா பாராட்டு…

naveen santhakumar

AV 33 படத்தில் இணையும் பிரபலங்கள்; எதிர்பார்ப்பை எகிறவைத்த படக்குழு !

News Editor

கார்த்தி பட நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி !

News Editor