சினிமா

பிரபல பாலிவுட் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி !

இந்தியா முழுவதும்  கொரோனா  தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

கடந்த ஒரு வாரமாக மும்பையில் வசிக்கும் பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. மாதவன், அமீர்கான், அக்ஷய் குமார், வைபவி, ஆலியா பாட் உள்ளிட்டோரை தொடர்ந்து தற்போது நடிகை கத்ரீனா கைஃபுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதற்காக தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். மருத்துவ விதிமுறைகளையும் கடைபிடிக்கிறேன். விரைவில் குணமடைந்து திரும்புவேன். கடந்த ஒருவார காலமாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள், உங்கள் அன்புக்கு நன்றி பாதுகாப்பாக இருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.    

#katrinakaif  #TamilThisai #cinema #Cinemanews #corona #Covid19 #bollywood #HindiCinema #cinemanews #CinemaTrending #CoronaVirus

Related posts

திடீரென முதல்வரை சந்தித்தார் நடிகர் ‘சரவணன்’ 

News Editor

திரெளபதி திரைப்படம் வெளியிடுவதில் சிக்கல்

Admin

இயக்குனர் வசந்தபாலனுடன் இணையும் ‘மாஸ்டர்’ பட நடிகர்..!

News Editor