தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் தனித்தனியான பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் நாள் திருமணம் செய்துக் கொண்டனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை விட ஒரு வயது மூத்தவர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் இருவரும் விவாகரத்து செய்து கொள்ள உள்ளதாக இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பெயரில் வெளியாகியுள்ள அறிக்கையில், 18 ஆண்டுகளாக நண்பர்கள், வாழ்க்கைத் துணை, பெற்றோர் என இருவரும் இணைந்திருந்தோம். இந்த பயணம் புரிதல், விடுக்கொடுத்தல், ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலமாக சாத்தியமானது. இன்று நாங்கள் எங்களது பாதையில் தனித்தனியாக செல்ல முடிவெடுத்துள்ளோம். கணவன் மனைவி என்ற உறவில் இருந்து பிரிந்து நாங்கள் தனிப்பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளோம்.எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை அனைவரும் மதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் எனக்குறிப்பிட்டுள்ளார்.