சினிமா

மீண்டும் கொரோனா அதிகரிப்பு: இன்று முதல் வணிக வளாகங்கள், அங்காடிகள் இயங்க தடை…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 9 இடங்களில் இன்று முதல் வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகள் இயங்க அனுமதி இல்லை என்று மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கண்ணம்மாபேட்டை மயானம்.,! சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு.! -  Seithipunal

இதன்படி, வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை அங்காடிகள் இயங்க அனுமதி இல்லை.
புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை வணிக வளாகம், அங்காடிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
ஜாம் பஜார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை அங்காடிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

ALSO READ  வீரர்களையும் விட்டு வைக்காத கொரோனா; ஐ.பி.எல் தொடரில் பரபரப்பு !

ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜாரில் வணிக வளாகம், அங்காடிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
என்.எஸ்.சி போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை வணிக வளாகம், அங்காடிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
ராயபுரம் மார்க்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க் – காமாட்சி அம்மன் கோயில் வரை கடைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

மேலும், அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திருவிகநகர் சந்திப்பு வரை கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரெட்ஹில்ஸ் மார்க்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை அங்காடிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
கொத்தவால்சாவடி சந்தை நாளை முதல் 9ஆம் தேதி காலை 6 மணி வரை செயல்பட அனுமதியில்லை.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இத்தனை பேர் பாலியல் தொல்லை கொடுத்தார்களா..???? அதிரவைக்கும் ரேவதி சம்பத்…..

Shobika

ஊடகங்களில் வெளியாகும் செய்தி தவறானது; இயக்குநர் லிங்குசாமி

News Editor

நடிகர் “பரத்” நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியீடு !

News Editor