சினிமா

விக்ரம், த்ருவ் விக்ரம் நடிக்கும் “சீயான் 60” படப்பிடிப்பு தொடக்கம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார் விக்ரம். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான கடாரம் கொண்டான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. இவர் தற்போது  இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் “பொன்னியின் செல்வன்” படத்திலும் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கும் “கோப்ரா” படத்திலும் நடித்து வருகிறார். 

இகனையடுத்து நடிகர் விகாரம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “விக்ரம் 60” படத்தில் நடிக்கவுள்ளார். இதில் விக்ரமும் அவரது மகன் த்ருவ் விக்ரமும் இணைந்து நடிக்கவுள்ளனர். தற்காலிகமாக ‘சீயான் 60’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை லலித் தயாரிக்கிறார்.  

இயக்குனர் சுப்புராஜ் படத்த்தின் ஆரம்பகட்ட பணிகளை முடித்துள்ளநிலையில் விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கவுள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடிக்கவுள்ளார். முதலில் அனிருத் இசையமைப்பதாக இருந்த இப்படத்திற்கு தற்போது சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

ALSO READ  விவசாயிகள் உடனான 11 கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியது மத்திய அரசு !


இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பானது இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இத்தகவலை, தயாரிப்பு நிறுவனம் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ராஜமௌலி படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்

Admin

‘தனிஒருவன் 2’ படத்தினை தள்ளிப்போட்டு சிரஞ்சீவி படத்தை இயக்கும் மோகன் ராஜா ! 

News Editor

கதாநாயகனாக அவதாரமெடுக்கும் இயக்குனர் பிரபு சாலமனின் புதல்வன் :

Shobika