சினிமா

“சீயான் 60” படத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார் விக்ரம். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான கடாரம் கொண்டான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. இவர் தற்போது  இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் “பொன்னியின் செல்வன்” படத்திலும் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கும் “கோப்ரா” படத்திலும் நடித்து வருகிறார்.

இதனையடுத்து நடிகர் விகாரம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “விக்ரம் 60” படத்தில் நடிக்கவுள்ளார். இதில் விக்ரமும் அவரது மகன் த்ருவ் விக்ரமும் இணைந்து நடிக்கவுள்ளனர். தற்காலிகமாக ‘சீயான் 60’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை லலித் தயாரிக்கிறார். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் படத்தின் ஆரம்பகட்ட பணிகளை முடித்துள்ளநிலையில் விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கவுள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடிக்கவுள்ளார்.

முதலில் அனிருத் இசையமைப்பதாக இருந்த இப்படத்திற்கு தற்போது சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் பூஜையுடன் தொடங்கியுள்ள நிலையில் சீயான் 60 படத்தில் நடிகர் பாபி சிம்ஹா நடிக்கவுள்ளதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

ALSO READ  வெளியாகியது 'ஏலே' படத்தின் ட்ரைலர் !

#chiyaan #chiyaan60 #vikram #dhruvvikram #tamilmovie #tamilcinema #tamilthisai #bobbysimha #kollywood #cinema #CineUpdate #karthiksubbaraj #cobra #simran #vanibhojan #movie #cinematrending


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அவதார் 2 படத்தின் First Look வெளியீடு

Admin

சொன்ன சொல்லை நிறைவேற்றிய சமந்தா!

News Editor

பாலிவுட் குயின் கத்ரீனா கைஃப் பிறந்தநாள் இன்று

naveen santhakumar