சினிமா

மீண்டும் ஒரு உலக புகழ் பெற்ற விருதுக்கு ‘சூரரை போற்று’ தேர்வு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலக சினிமாவின் சிறந்த படைப்புகளை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் க்ரிட்டிக்ஸ் சாய்ஸ் விருது  வழங்கப்படுகிறது. இவ்விருது சினமா துறையின் உயரிய விருத்தாக கருதப்படுகிறது. அதனையடுத்து இந்தாண்டிற்கான 26 வது க்ரிட்டிக்ஸ் சாய்ஸ் விருது வரும் மார்ச் 27 ஆம் தேதி கலிஃபோர்னியாவில் நடைபெறவுள்ளது.  

ஃபிலிம் க்ரிட்டிக்ஸ் கில்ட் மற்றும் மோஷன் கன்டன்ட் குழு ஆகியவை விஸ்டாஸ் மீடியா கேப்பிட்டலுடன் இணைந்து இந்த மாபெரும் விருது வழங்கும் விழாவை நடத்தவுள்ளன. இந்நிலையில் க்ரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதின்  இந்திய சினிமாக்களுக்கான நாமினிக்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், சிறந்த படைப்புகளாக  பல தமிழ் திரைப்படங்களும் இடம்பெற்றுள்ளனர்.

 சூர்யா நடிப்பில்  சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற சூரரை போற்று மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், விருமாண்டி இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற க/பெ ரணசிங்கம், அதனையடுத்து வெற்றிமாறன் இயக்கிய பாவக்கதைகள், மற்றும் மிஸ்கின் இயக்கிய சைக்கோ  உள்ளிட்ட படங்கள் இதில் தேர்வாகியுள்ளனர். 

ALSO READ  மோஷன் போஸ்டர் எப்போது...மாநாடு படக்குழு கொடுத்த அப்டேட்..!


சூரரை போற்று சிறந்த  ( திரைப்படம், எழுத்து, ஒளிப்பதிவு, எடிட்டிங்) , க/பெ ரணசிங்கம் (சிறந்த நடிகை – ஐஸ்வர்யா ராஜேஷ்), பாவக்கதைகள் சிறந்த துணை நடிகர் – பிரகாஷ் ராஜ் மற்றும் சிறந்த துணை நடிகை – சாய் பல்லவி) மற்றும் சைக்கோ (சிறந்த ஒளிப்பதிவு – தன்வீர் மிர்)  உள்ளிட்ட பிரிவுகளில் இடம் பெற்றுள்ளனர். 

#criticschoice #award2020 #surya #sooraraipottru #pavakadhaikal #prakashraj #saipallavi #kapaeranagingam #tamilcinema #tamilmovie


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தளபதி 65 படத்தில் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர் !

News Editor

எனிமி படத்தின் ஆர்யா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!

News Editor

திரௌபதி படத்தின் மூன்று நாட்கள் கலக்‌ஷன் என்ன தெரியுமா.!!!

naveen santhakumar