சினிமா

பிரபல நடன இயக்குநர் கூல் ஜெயந்த் மறைவு – திரையுலகினர் இரங்கல்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரபல நடன இயக்குனர் கூல் ஜெயந்த் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடன இயக்குனர் கூல் ஜெயந்த் மறைவ

1996ஆம் ஆண்டு வெளியான ‘காதல் தேசம்’ திரைப்படத்தில் முதன்முதலாக நடன இயக்குநராக அறிமுகமானார் கூல் ஜெயந்த் (எ) ஜெயராஜ். அப்படத்தில் இடம்பெற்ற ‘முஸ்தஃபா’, ‘கல்லூரிச் சாலை’ ஆகிய பாடல்களின் நடனம் அந்த காலகட்டத்தில் மிகவும் பிரபலமானவை. முன்னதாக பிரபு தேவா மற்றும் ராஜு சுந்தரம் ஆகியோரது நடனக் குழுவிலும் கூல் ஜெயந்த் இருந்துள்ளார்.

கூல் ஜெயந்த் இதுவரை 500 படங்களுக்கு மேல் கோரியோகிராஃபராக பணியாற்றி இருக்கிறார். இவர் தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

ALSO READ  துல்கர் சல்மான் படத்தின் டீசர் வெளியீடு!

இந்நிலையில் கூல் ஜெயந்த் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை (நவ. 10) சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அடேங்கப்பா…!!!!ஹனிமூனுக்கு இவ்ளோ செலவா????பயங்கரம் காஜல் நீங்க…

naveen santhakumar

அஜித் பட நடிகைக்கு கொரோனா தொற்று ! 

News Editor

அந்த பிரபலத்தின் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் நிவேதா பெத்துராஜ் :

Shobika