சினிமா

உடலை வில்லாய் வளைத்து ஒர்க்அவுட் செய்யும் நடிகை குஷ்பு… வைரலாகும் பிக்ஸ்…! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

80,90களில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு.

தற்போது, 49 வயதாகும் நடிகை குஷ்பு சினிமா மட்டுமின்றி, அரசியல், சின்னத்திரை என பரபரப்பாக இயங்கி வருகிறார். தற்போது சிவா இயக்கத்தில் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சினிமாவிற்கு இடையே அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

ALSO READ  விசாவிற்காக தான் கல்யாணம்-ராதிகா ஆப்தே:

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு, ஊரடங்கால் வீட்டிலேயே உடற்பயிற்சிகள் செய்து தன் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

அந்தவகையில் குஷ்பு தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். 

உடலை வில்லாக வளைத்து கடினமான பயிற்சிகளை செய்யும் குஷ்புவின் இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சர்யம் அடைய வைத்துள்ளது. 

ALSO READ  "கோடியில் ஒருவன்" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

இந்த வயதிலும் குஷ்பு இவ்வளவு வளையும் தன்மையுடன் இருப்பது தான் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்திருக்கிறது. ரசிகர்கள் மட்டுமின்றி நடிகை ஹன்சிகா, கிகி விஜய், பிருந்தா மாஸ்டர் என சினிமா பிரபலங்களும் கூட குஷ்புவின் இந்த புகைப்படங்களை பார்த்து அவரைப் பாராட்டியுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மோகன் ஜி படத்தில் இணைந்த பிரபல நடிகர் !

News Editor

நடிகர் விமலின் அடுத்த பட அறிவிப்பு ….

News Editor

மலையேற்றத்துக்கு கிளம்பிய நடிகை தமன்னா… 

naveen santhakumar