சினிமா

நடிகைகள் சஞ்சனா, ராகினி போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி- வழக்கில் திடீர் திருப்பம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகைகள் சஞ்சனா கல்ராணியும், ராகினி திவேதியும் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் அந்த இரண்டு பேருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

Sandalwood drugs case: Ragini Dwivedi sent to judicial custody, Sanjjana  Galrani's remand extended | Celebrities News – India TV

சட்டவிரோதமான கோலிவுட் முதல் பாலிவுட் வரை போதைப்பொருள் பயன்பாடு உள்ளது. அவ்வப்போது போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்படுவதும், பின் விடுதலையாவதும் சாதாரண நிகழ்வாகிவிட்டது.

ஆனால் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை இவ்விவகாரத்தைப் பூதாகரமாக்கியது. இந்நிலையில், கன்னட இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ராகினி, சஞ்சனா கல்ராணி இவர்களின் நண்பர்கள் உள்பட 14 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

ALSO READ  என் வருங்காலக் குழந்தைகளின் அன்னையே-நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் அன்னையர் தின வாழ்த்து...

இதையடுத்து சஞ்சனா கல்ராணி மற்றும் ராகினி கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பிறகு அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். 10 மாதங்கள் கழித்து தற்போது அந்த வழக்கில் புது திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.

Police Custody Of Ragini, Sanjana Extended By 3 Days | Entertainment

இவர்கள் போதைப்பொருள் உட்கொண்டார்களா என்பதை ஆய்வுசெய்வதற்காக அவர்களின் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளை ஹைதராபாத்திலுள்ள ஆய்வகத்திற்கு மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் அனுப்பிவைத்தனர். ஆனால் சிறுநீரில் தண்ணீரைக் கலந்து கோல்மால் செய்தனர் இரு நடிகைகளும்.

ALSO READ  14 பாடல்கள் கொண்ட ஏ.ஆர் ரஹ்மான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !
Sandalwood Drugs Connection: Actress Ragini Dwivedi sent to 14-day judicial  custody, Sanjana Galrani will also be questioned by police for the next 2  days | एक्ट्रेस रागिनी द्विवेदी को 14 दिन की

அதற்குப் பின்னர் அவர்களின் தலைமுடி மாதிரிகளை எடுத்து ஆய்வுக்குட்படுத்தினர். தடவியல் நிபுணர்கள் ஆய்வுசெய்ததில் இருவரும் போதைப்பொருட்கள் உட்கொண்டது உறுதியாகியுள்ளது. வழக்கில் முக்கிய ஆதாரம் கிடைத்திருப்பதால் இருவரும் சிறை செல்ல வாய்ப்பிருக்கிறது.

போதைப் பொருள் வழக்கு விசாரணையில் முதல் முறையாக தலைமுடியை பரிசோதனை செய்திருக்கிறார்கள். போதைப் பொருள் உட்கொண்டால் சுமார் ஓராண்டு காலம் வரை அது முடியில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று !

News Editor

4 மொழிகளில் OTT-யில் வெளியாகும் “டாக்டர்”

Shobika

‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் ட்ரைலர் வெளியீடு !

News Editor