சினிமா

ஜி.வி பிரகாஷ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘டார்லிங்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். அந்த படம் வெளியாகி அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து பல்வேறு படங்களில் நடிகராக நடித்துவருகிறார். அந்தவகையில்   ஜி.வி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடங்காதே’, ‘ஜெயில்’ ஆகிய படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன. 

ALSO READ  மொட்டை ராஜேந்திரன்-2 விற்கு டும்..டும்...டும்….


இந்நிலையில், நடிகர் ஜி.வி.பிரகாஷ் தனது அடுத்த படத்திற்காக இயக்குநர் ராஜேஷுடன் கைக்கோர்த்துள்ளார். ஏற்கனவே இவர்களின் கூட்டணியில்  ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சன் என்டர்டைன்ட்மென்ட்  நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படம் குறித்த அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இப்படத்தின்  ‘வணக்கம்டா மாப்ள’ எனப் பெயரிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. தற்போது இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது. 

ALSO READ  ரமலான் மாத சிறப்பு தொழுகைக்காக இரண்டு மணிநேரம் அனுமதி அளிக்க வேண்டும் !

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“உன் விழிகளில் விழுந்த நாள் முதல்” – நடிகை சிருஷ்டி டங்கே புகைப்பட தொகுப்பு

Admin

மீண்டும் ஒரு மனித உறுப்புக்கடத்தல் கதை – வெளியானது டாக்டர் டாக்டர்

News Editor

கவிஞர் வைரமுத்துக்கு இலக்கியத் துறையின்  மிக உயரிய விருது அறிவிப்பு !

News Editor