சினிமா

நேரடியாக டிவியில் வெளியாகும் ஜி.வி.பிரகாஷ் திரைப்படம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘டார்லிங்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். இந்த படம் வெளியாகி அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து பல்வேறு படங்களில் நடிகராக நடித்து வருகிறார். அந்த வகையில்   ஜி.வி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடங்காதே’, ‘ஜெயில்’ ஆகிய படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன.

இந்நிலையில், நடிகர் ஜி.வி.பிரகாஷ் தனது அடுத்த படத்திற்காக இயக்குநர் ராஜேஷுடன் கைகோர்த்துள்ளார். ஏற்கனவே இவர்களின் கூட்டணியில்  ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சன் என்டர்டெயின்மென்ட்  நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வணக்கம் டா மாப்ள என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் வணக்கம் டா மாப்ள திரைப்படம் வரும் யேபரல் 14 ஆம் தேதி சன் டிவியில்   நேரடியாக வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அண்மையில் நடிகர் யோகிபாபு நடித்திருந்த மண்டேலா திரைப்படம் சன் டிவியில் நேரடியாக வெளியானது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ  காய்கறி திட்டத்தில் முறைகேடு நடந்தால் உடனடி நடவடிக்கை !

#GVpraksh #TamilThisai #Tamilcinema #Cinemanews #Cinematrending #suntv #Amirt #yogibabu #Cinematimews


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெற்றிமாறன் படத்தில் நடிக்க முடியாது …! விலகிய பிரபலம்… !

News Editor

முதல் முறையாக இந்தியில் ரீமேக்காகும் பிரபல தமிழ் சீரியல்…!

News Editor

KGF -2 படத்தின் ஆடியோ உரிமையை ரூ.7 கோடிக்கு வாங்கிய நிறுவனம் :

Shobika