சினிமா

ஹன்சிகாவின் 50-வது படத்தின் மீதுள்ள வழக்கு தள்ளுபடி :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகை ஹன்சிகாவின் 50-வது படம் ‘மஹா’. U.R.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மதியழகன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இதனிடையே, தனக்கு தெரியாமல் படத்தை முடித்து,OTT தளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் முயற்சிகள் நடப்பதாகவும், படத்தை வெளியிட தடை கோரியும் இயக்குனர் U.R .ஜமீல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, படத்தின் உருவாக்கம், தலைப்பு உள்ளிட்ட எதிலும் இயக்குனருக்கு எந்த உரிமையும் இல்லை என ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் ‘மஹா’ படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக இயக்குனர் U.R.ஜமீலுக்கு ரூ.5,50,000 ஊதியதொகை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Share
ALSO READ  நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ராஷி கன்னாவின் ரசிக்க வைத்த அண்மை புகைப்படங்கள்

Admin

பிரபல ஹாலிவுட் பட இயக்குநர்கள் படத்தில் நடிக்கும் தனுஷ்

News Editor

பிரபல சீரியல் நடிகையின் கணவர் தூக்கிட்டு தற்கொலை

Admin