சினிமா

கேரள அரசு சார்பில் இளையராஜாவுக்கு விருது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கேரள அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் ஹரிவராசனம் விருது இந்த ஆண்டு இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள அரசு மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக அதிக பங்களிப்பு செய்தவர்களுக்கு ஆண்டுதோறும் ஹரிவராசனம் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. கடந்த ஆண்டுக்கான விருதை பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை சன்னிதானத்தில் வரும் 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந்தேதி வைத்து இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த விருதில் ரூ.1 லட்சம் பணம், சான்றிதழ் மற்றும் கேடயம் ஆகியவை இடம் பெறும். அதனோடு ‘வணக்கத்துக்குரிய இசைஞானி’ என்ற பட்டமும் இளையராஜாவுக்கு வழங்கப்பட உள்ளது.


Share
ALSO READ  இந்தியன் 2 அப்டேட்: ஓராண்டாகியும் தொடங்கப்படாதா படப்பிடிப்பு; காரணத்தை வெளியிட்ட காஜல் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘தலைவா’ என ரஜினிகாந்த்-க்கு நன்றி சொன்ன TwitterIndia….

naveen santhakumar

“இதுவே என்னுடைய சிறந்த பிறந்தநாள்”;லோகேஷ் கனகராஜ் ட்வீட் !

News Editor

மொட்டை ராஜேந்திரன்-2 விற்கு டும்..டும்…டும்….

naveen santhakumar