சினிமா

2020ம் ஆண்டு நீங்கள்தான்… பிக்பாஸ் கவினை வாழ்த்தும் ரசிகர்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

2020isyoursKAVIN என்ற ஹேஷ்டேக் மூலம் டுவிட்டரில் சின்னத்திரை நடிகர் கவினை அவரது ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

சரவணன் மீனாட்சி தொடர் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகர் கவின். இவர் இந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு போட்டியாளரான லாஸ்லியா உடன் காதல், சேரனுடன் மோதல் என நிகழ்ச்சி முழுவதுமே அவர் தனிநபராக வெளிப்பட்டார். இதனால் அவருக்கென தனி ரசிகர் படை உருவானது. சின்னத்திரை தாண்டி பெரிய திரையில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த சத்ரியன் படத்திலும், ஹீரோவாக ”நட்புனா என்னனு தெரியுமா?” என்ற படத்திலும் நடித்தார்.

இந்த நிலையில் டுவிட்டரில், #2020isyoursKAVIN என்ற ஹேஷ்டேக் மூலம் ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர். சமீபத்தில் அவர் இந்த ஆண்டுக்கான சின்னத்திரையில் இருந்து அதிகளவில் பிரபலமான நபர் என்ற விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  நடிகைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கல்லூரி மாணவன் கைது ..!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இயக்குனர் ஹரி படத்தில் இணையும் ஜி.வி பிரகாஷ் !

News Editor

தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்- ரசிகர்கள் கொண்டாட்டம்

Admin

அடடே!!!!!!!அந்த நடிகர் கூட…. பிரியா பவானிசங்கர் ஜோடி சேர்ந்திருக்காங்களா?????

naveen santhakumar