சினிமா

‘ஜகமே தந்திரம்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இப்படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மே மாதம் படத்தை வெளியிட படக்குழுத் திட்டமிட்டது.கொரோனா பெருந்தொற்று காரணமாக படம் தள்ளிப்போனது.

இதனால், ஜகமே தந்திரம் ஓடிடியில் வெளியாகுமா அல்லது தியேட்டரில் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்தது. அதனைத்தொடர்ந்து படம் ஜூன் 18-ல் நேரடியாக நெட் ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியிடப்படும் என்ற அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ALSO READ  ஒரே நாளில் 500 கொலை மிரட்டல்; பரபரப்பை கிளப்பிய சித்தார்த் ட்வீட் ! 

அண்மையில் படத்தின் டீஸரும், நேத்து என்ற பாடலும் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது படத்தின் ட்ரைலர் வெளியீட்டு தேதியை படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், வரும் ஜூன் 1 ஆம் தேதி ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தற்போது தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபாஸோடு நடிக்க முடியாது…வெளிப்படையாக சொன்ன பிரபல நடிகை

Admin

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவி…

naveen santhakumar

இணையத்தில் வைரலாகும் மாஸ்டர் விஜய்-ன் ஐடி கார்டு….

naveen santhakumar