சினிமா

“ஜிமிக்கி கம்மல்” பாடலாசிரியர் கொரோனாவால் மரணம்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான அணில் பனசூரன் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மலையாள திரையுலகம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.

பிரபல மலையாள பாடலாசிரியரான அனில் பனசூரன், 2005-ஆம் ஆண்டில் வெளிவந்த ‘மகள்க்கு’ என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவிற்கு அறிமுகமானார்.  இவர், கடந்த 2017-ஆம் ஆண்டில் வெளியாகி இந்தியா முழுவதும் வைரலான ‘ஜிமிக்கி கம்மல்’ என்ற பாடலின் பாடலாசிரியர் ஆவார். மேலும், மலையாள இலக்கிய உலகில் முக்கிய கவிஞராகவும் அறியப்பட்டு வந்தார். 

இந்நிலையில், சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அணில் பனசூரன் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டிருந்தார். நேற்றிரவு திடீரென சிகிச்சை பலனளிக்காமல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததை மருத்துவர்கள் அறிவித்தனர். இதனால், மலையாள திரையுலகமே யா திருச்சியில் மூழ்கியுள்ளது.

ALSO READ  எம்.பி பதவியை ராஜினாமா செய்த அதிமுகவினர் !

மேலும் பாடலாசிரியர் அணில் பனசூரனுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு சிறந்த பாடல் ஆசிரியருக்கான ஃபிலிம் ஃபேர் விருது கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

#anilpanachooran #jimikkikammal #malayalamovie #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘கோமகனின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்’; இயக்குநர் சேரன் இரங்கல் !

News Editor

திரையுலகில் டிரெண்டாகும் Real Man Challenge …! அசத்தும் திரைப் பிரபலங்கள்….

naveen santhakumar

தேசிய விருது கனவை நனவாக்க கடுமையாக உழைக்கிறார் நித்யாமேனன்

Admin