உலகம் சினிமா

சித்தார்த் சுக்லாவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ஜான் சீனா.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சித்தார்த் சுக்லாவின் மறைவிற்கு , மல்யுத்த சூப்பர் ஸ்டார் ஜான் சீனா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சித்தார்த் சுக்லாவின் புகைப்படத்தை பகிர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

மல்யுத்த வீரர் ஜான் சீனா, இவர் முன்னாள் நடிகரும் கூட ஆவார். இவர் சமீபத்தில் மறைந்த நடிகர் சித்தார்த் சுக்லாவின் கருப்பு வெள்ளை புகைப்படத்தை  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். ஆனால் அவர் எந்த ஒரு கருத்தையும் பதிவிடவில்லை. இவரது பதிவை வருண் தவான் மற்றும் அர்ஜுன் கபூர் இருவரும் லைக் செய்துள்ளனர் .

சித்தார்த் சுக்லா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அவர் மாரடைப்பு காரணமாக இறந்ததாக கூறப்படுகிறது.

ALSO READ  தனது இன்ஸ்டாகிராம் பக்க பதிவுகளை, திரிஷா நீக்கியதற்கு என்ன காரணம்???? குழப்பத்தில் ரசிகர்கள்:

சித்தார்த் பிக்பாஸ் சீசன் 13ன் வெற்றியாளர் ஆவார். இவர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றில் நடித்துள்ளார். இவருக்கு தாய் ரீட்டா கபூர் மற்றும் இரண்டு சகோதரிகள் உள்ளனர்.

ஜான் சீனா கடந்த ஆண்டுகளில் ரிஷிகபூர், இர்பான் கான் மற்றும் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆகியோரின் மறைவிற்கு இன்டாகிராம் பதிவின் மூலம் அஞ்சலி செலுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. -சா.கற்பகவிக்னேஷ்வரன்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இளம் பெண்ணின் கற்பை காப்பாற்றிய கொரொனா வைரஸ் !

Admin

புதிய மின்சார விமானத்தை அறிமுகம் செய்த ரோல்ஸ் ராய்ஸ்

Admin

துண்டிக்கப்பட்ட கையுடன் நிர்வாணமாக சாலையில் ஓடிய நபரால் பரபரப்பு:

naveen santhakumar