சினிமா

நயன்தாராவை பின்பற்றும் காஜல் அகர்வால் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறையில் முன்னணி நடிகையாக காஜல் அகர்வால் இருந்து வருகிறார். தற்போது இயக்குனர் கல்யாண் இயக்கியுள்ள புதிய படத்தில் நடித்துள்ளார். இவர் நடிகர் பிரபு தேவ நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற குலேபகாவலி படத்தையும், ஜோதிகா நடிப்பில் வெளியான ஜாக்பாட் படத்தையும் இயக்கிருந்தது குறிப்பிடத்தக்கது. 

பேய் கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் காஜல் அகர்வால் பேயாக மட்டும் இன்றி போலீஸ் அதிகாரியாகவும் மற்றும்  சினிமா நடிகையாகவும் நடித்துள்ளார். இப்படத்திற்கு கோஸ்டி என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, திரிஷா, ஆன்ட்ரியா, ஹன்சிகா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் பேயாக நடித்திருந்த நிலையில் தற்போது நடிகை காஜல் அகர்வாலும் பேயாக நடிக்கவுள்ளார்.   

இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் கே எஸ் ரவிக்குமார், யோகி பாபு மொட்டை ராஜேந்திரன் ஊர்வசி மயில்சாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர் மேலும் இப்படத்தில் 30 நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதால், இறுதிக்கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு.

ALSO READ  ‘ஜாக் ரீச்சர்’ பட வாய்ப்பை டாம் க்ரூஸிடம் இழந்தேன் - WWE Rock...

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகை தமன்னா வெளியிட்டுள்ள இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.  

#kajalagarwal #TamilThisai #Tamilcinema #tamilnadu #Ghosty #nayanthara #cinema #Cinemanews #Kollywood #TamilThisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஹாலிவுட் படத்திற்காக அமெரிக்கா செல்லும் தனுஷ்!

News Editor

ஆஸ்கர் விருதுக்கு செல்லும் சூரரை போற்று!

News Editor

62 ஆண்டுகளை நிறைவு செய்த கமல்….புதிய போஸ்டர் வெளியிட்ட விக்ரம் படக்குழு

Shobika