சினிமா

விவேக்கின் மரணம் தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பு; கமல்ஹாசன் இரங்கல் ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார். தனது 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் மக்களுக்கு தேவையான  மூடநம்பிக்கை, லஞ்சம், ஊழல் உள்ளிட்ட சமூக ரீதியான கருத்துக்களை தனது காமெடி மூலம் அனைவரிடத்திலும் கொண்டு சேர்த்தவர்.

இந்நிலையில் நடிகர் விவேக் நேற்று நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதனையடுத்து அவருக்கு எக்மோர் கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நடிகர் விவேக் இன்று காலை 4.35 மணியாளவில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இதனையடுத்து இவரின் இறப்பிற்கு திரைப் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் மக்கள் நீதி மய்யம்கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்து விடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு” எனக் குறிப்பிட்டுள்ளார்.  

ALSO READ  ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்த பார்த்திபன் !

#Corona #Coronavaccine #TamilThisai #Tamilcinema #Cinema #Cinemanews #Tamilnadu #Vivek #Kollywood #RIPviveksir #vairamuthu #Kamalhaasan #Tamilmovie


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“பூமி” படம்  வெளியீட்டு தேதி,  அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

News Editor

“தளபதி 65″படம் குறித்து  ஒளிப்பதிவாளர் ட்வீட் !

News Editor

அர்னாப் பேசவே விடவில்லை: So I am eating my lunch- நடிகை கஸ்தூரி… 

naveen santhakumar