சினிமா

“கமலுக்கு வில்லன் ராகவலரன்ஸ்” விக்ரம் பட அப்டேட் வெளியீடு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தினை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரிக்  மீடியா இணைந்து தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு விக்ரம் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

ALSO READ  கால்டாக்ஸி விவகாரம்; ஓட்டுநரை கத்தியால் குத்திய இந்து முன்னணியினர் !


தமிழக சட்டமன்ற தேர்தல் வரவுள்ளநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதனால் தேர்தல் பணிகள் அனைத்து முடிந்தவுடன் விக்ரம் படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளது படக்குழு. விக்ரம் படத்தின் மற்ற நடிகை நடிகர்களை தேர்வு செய்து வரும் படக்குழு படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பிரபுதேவா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில், ‘விக்ரம்’ படத்தின் வில்லன் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் கமலுக்கு வில்லனாக நடிகர் லாரன்ஸை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. கமலுக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்றவுடன் லாரன்ஸும் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாநாடு விவகாரம்: சிம்பு மற்றும் குடும்பத்தினர் மீது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகார்

naveen santhakumar

நவராசாவை தொடர்ந்து மற்றொரு ஆந்தாலஜி படம் OTT-யில்……..

Shobika

தலைவி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியீடு :

Shobika