சினிமா

கமல் படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர் !

விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரிக்  மீடியா இணைந்து தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு விக்ரம் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இதனிடையே விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் தற்போது இதனை தற்போது அவர் உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில் விக்ரம் படத்தின் கதை எனக்கு பிடித்திருந்ததாகவும், அதில் அரசியல் வாதியாகவும் நடிக்கவுள்ளதாக கூறினார். 


நடிகர் பஹத் பாசில் இயக்குநர் மோகன் ராஜா இயக்கிய வேலைக்காரன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

#kamal #kamalhassan #Lokeshkanagaraj #VikramTamilmovie #cinema #cinemanews #cineaupdate #cinenews #TamilThisai #FahadFaasil #kollywood

Related posts

“அழகென்றால் அவள்தானா”…நடிகை இவானா ஆல்பம்

Admin

“தளபதி 65” படத்தில் நடிக்கும் பூஜா ஹெக்டே !

News Editor

ஸ்ரீ பிரியங்காவின் சட்டம் தன் கடமையை செய்யும் :

naveen santhakumar