விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு விக்ரம் என பெயரிடப்பட்டுள்ளது.

பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் இப்படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார். முதற்கட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கமலின் அரசியல் பணிக்காக விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமலே இருந்தது. இதனிடையே நேற்று தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடிக்க தயாராகியுள்ளார்.

படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கமலுடன் விமானத்தில் ஒன்றாக பயணிக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘ஆரம்பிக்கலாங்களா’ என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது உறுதியாகிவிட்டது.
#kamal #kamalhassan #Lokeshkanagaraj #VikramTamilmovie #cinema #cinemanews #cineaupdate #cinenews #TamilThisai #FahadFaasil #kollywood