சினிமா

விக்ரம் படத்தின் கதையில் மாற்றம் செய்த கமல் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரிக்  மீடியா இணைந்து தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு விக்ரம் என பெயரிடப்பட்டுள்ளது.

ALSO READ  நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா காலமானார்....

பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் இப்படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார். முதற்கட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கமலின் அரசியல் பணிக்காக விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமலே இருந்தது.இதைத் தொடர்ந்து, விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ‘விக்ரம்’ படப்பிடிப்பை வரும் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விக்ரம் படத்தின் கதையில் நடிகர் கமல்ஹாசன் சில திருத்தங்களை செய்துள்ளார். இதனை சரி செய்யும் வேளையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் திரைக்கதையை இறுதி செய்து குறிப்பிட்ட தேதியில் விக்ரம் படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ALSO READ  போக்குவரத்து ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் வாபஸ் !


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கிய சூர்யா !

News Editor

‘தனிஒருவன் 2’ படத்தினை தள்ளிப்போட்டு சிரஞ்சீவி படத்தை இயக்கும் மோகன் ராஜா ! 

News Editor

அதிக பார்வையாளர்களை கடந்து விஸ்வாசம் பட பாடல் சாதனை

Admin